ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சண்டக்கோழி 2'. படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அமைகப்பட்டுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் இயக்குனர் லிங்குசாமி, விஷால் உள்ளிட்டோர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.
கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டில் பல படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் 'சாமி ஸ்கொயர்', விஷாலுடன் 'சண்டக்கோழி 2', விஜய்யுடன், ஏ.ஆர்.முருகதாஸ் படம், சாவித்ரியின் பயோகிராபியான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி. 2018ம் ஆண்டை இன்று சூர்யாவுடன் ஜோடியாக நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' பட வெளியீட்டுடன் ஆரம்பித்துள்ளார் கீர்த்தி. அதற்காக படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.