சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கடந்த வருடத்தில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த நடிகர் என்றால் அது மலையாள நடிகர் பிருத்விராஜாகத் தான் இருக்கும். அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு மாதங்களில் ரோஷினி தினகரின் 'மை ஸ்டோரி' படம் மற்றும் அஞ்சலி மேனனின் டைரக்சனில் நடிக்கும் படம் என மாறி மாறி நடித்து வந்தார் பிருத்விராஜ்.
இதனால் கால்ஷீட் பிரச்சனை அது தொடர்பான தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து, இடைவெளியில்லாத தொடர் ஷூட்டிங் என டென்சனிலேயே நாட்களை நகர்த்திய பிருத்விராஜ், புத்தாண்டை ஒட்டி கிடைத்த சில நாட்கள் இடைவெளியில் மனைவி, குழந்தையுடன் லண்டனுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.