ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தை இயக்கி தயாரித்த மிஷ்கின் அடுத்து 'சவரக்கத்தி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். மிஷ்கின், இயக்குர் ராம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை ஜி.எஸ்.சத்யா என்ற புதிய இயக்குநர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பூர்ணா நடித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்திற்கு இசை அமைத்த அரோல் கரோலி சவரக்கத்தி படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகின. சவரக்கத்தி படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்தநிலையில் படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதேநாளில், பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள 'நாச்சியார்' படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால இரண்டு படங்களுக்கும் இடையே போட்டி உருவாகி உள்ளது.