இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சற்குணம் இயக்கத்தில் மாதவன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் புதிதல்ல. 'விக்ரம் வேதா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார் மாதவன். அடுத்து அவர் நடிக்க இருப்பது... சற்குணம் இயக்கும் படத்தில் தான்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் கதை காடுகளில் நடக்கும் முக்கிய சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதால், தாய்லாந்து, மங்கோலியா உட்பட உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் சண்டை காட்சிகளை அமைக்க, பிரபல ஹாலிவுட் சண்டை கலைஞர் க்ரே பரிட்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவரை ஒப்பந்தம் செய்து கொடுத்ததே மாதவன் தான்.