இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் சேரனிடம் உதவியாளராக இருந்தவர் ராமகிருஷ்ணன். குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் மூலம் ஹீரோவானர். அதன் பிறகு கோரிப்பாளையம், எந்த நேரத்திலும், ஒரு கனவு போல படங்களில் நடித்தார். போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தை இயக்கி நடித்தார். ஆனால் எந்தப் படத்திலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தற்போது அவர் நடித்து வரும் படம் டீக்கடை பென்ஞ், ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம். நாயகியாக தருஷி நடிக்கிறார். நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ரா லட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். வெங்கடேஸ்வர் ராவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ சாய் தேவ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ராம் ஷேவா கூறியதாவது:
இது சென்ட்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன், அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால் நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான். இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம்.
ஜனரஞ்சகமான படமாக டீக்கடை பெஞ்ச் படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது . என்றார். டீக்கடை பென்ஞ் நல்ல இடத்தை கொடுக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ராமகிருஷ்ணன்.