ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படம் ஸ்பெஷல் 26 என்ற இந்திப் படத்தின் ரீமேக் ஆகும். ஸ்பெஷல் 26 படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை நடிகர் தியாகராஜனின் மனைவி சாந்தியிடம் உள்ளதாக தெரிகிறது. இதனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கில் வெளியிடத் தடைகோரி ஸ்டார் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் சாந்தி தியாகராஜன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை படம் ரிலீசாகும் கடைசி நேரத்தில் கொண்டு வருவது சரியல்ல என்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சாந்தி தியாகராஜன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் இரண்டு நீதிபதிகளை கொண்ட பென்ஞ் தள்ளுபடி செய்தது. இதனால் எந்த சிக்கலும் இன்றி இன்று தானா சேர்ந்த கூட்டம் வெளிவந்தது.