நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாகுபலி 2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாகமதி. ஜனவரி 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தை பில்லா ஜமீந்தார் புகழ் அசோக் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். முன்ஜென்மம் மற்றும் ஹாரர் கலந்த திரில்லர் கதையில் பாகமதி உருவாகியிருக்கிறது.
பாகமதி டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியான மூன்று நாட்களில், பாகமதி தெலுங்கு டிரைலரை 77 லட்சம் பேர் பார்த்துள்ளனர், 1.29 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். தமிழ் டிரைலரை 14.45 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதன்மூலம் இரண்டு டிரைலர்களையும் சேர்த்து 1 கோடி பார்வையாளர்கள் இந்த டிரைலருக்கு கிடைத்திருக்கிறது.