ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி 2வை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் சாஹோ. சுதீப் இயக்க, பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி நடிக்கிறார் பிரபாஸ். மேலும், சாஹோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறுவதாக இருந்தது.
மேலும், துபாயில் இரண்டு அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. அந்த சண்டை காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் படமாக்க இருந்தார். அந்த சண்டை காட்சிகளுக்காக பிரபாஸ் ஒரு மாதத்திற்கு மேலாக பயிற்சி எடுத்து வந்த நிலையில், தற்போது நேற்று முதல் துபாயில் நடக்கயிருந்த படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டு, மீண்டும் ஐதராபாத்திலேயே சாஹோ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இன்னும் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு துபாய்க்கு இடம் பெயருகிறதாம் பிரபாஸ் படக்குழு.