ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலா இயக்கும் படங்கள் எப்போது வெளியாகும் என்பது பாலாவுக்கே தெரியாது என்று படத்துறையில் சொல்வார்கள். காரணம்... எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தன்னுடைய மனம் போன போக்கில் படம் எடுப்பார். இந்த விமர்சனத்துக்கு மாறாக, ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிக்கும் 'நாச்சியார்' படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து 'நாச்சியார் படத்தை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்! தற்போது கிடைத்த தகவலின்படி 'நாச்சியார்'படத்தை பிப்ரவரி-9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். 'மகளிர் மட்டும்' படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள படம் இது.
பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் நாச்சியார் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனைகள் எழும் என்று தகவல் வெளியாகி உள்ளது.