Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரமுத்து நாக்கில் சனி : மக்கள் கோபம்

11 ஜன, 2018 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Andal-comment-:-oppose-for-Vairamuthu

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வைரமுத்து, மன்னிப்பு என்று நேரடியாக கூறாமல் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், இது ஏற்புடையதாக அல்ல. காரணம், இந்துக்கள் கடவுளாக வணங்கும் தெய்வத்தை தரக்குறைவாக பேசிவிட்டு, புண்படும்படியாக பேசியிருந்தால் வருந்துகிறேன் என்று சொல்வது என்ன நியாயம். ஒருவரின் தனிப்பட்ட கருத்து என்னவாக வேண்டுமானால் இருக்கலாம். அதை பொதுமேடையிலா பேசுவது?, மதம் சார்ந்த ஒரு விஷயத்தை பேசும்போது யோசிக்க வேண்டாமா. அதுவும் மேல்நாட்டுக்காரர் கூறியதை இந்த இடத்தில் மேற்கோள் காட்ட என்ன அவசியம் வந்தது என வைரமுத்து மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போலீசில் புகார்

மத உணர்வுகளோடு விளையாடிய வைரமுத்துவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளார். அதில், பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ள, வைரமுத்து மற்றும் கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் பலரும் புகார் அளித்து உள்ளனர்.

நாக்கில் சனி
வைரமுத்துவின் இந்த கருத்திற்கு நடிகர் எஸ்வி சேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், "மூளையிலும், நாக்கிலும் சனி அமர்ந்துள்ள வைரமுத்து, கனிமொழி மூலமாக ஆண்டாள் அருளால் இனி, திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீரமணி நாவின் மீது அமர்ந்திருக்கும் சனி மூலமாக உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் மத்தியிலும் வைரமுத்துவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு...

எஸ்.ஏ.சர்மா - ஐதராபாத்

உன் தாய் உன்னை சுமந்த மாதமோ பத்து, உன் பெற்றோர்கள் உனக்கு வைத்த பெயரோ வைரமுத்து. ஆனால் உனக்கு பிடித்து விட்டதோ பித்து. ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள். உனக்கு தெரியுமோ, நீ ஒரு முட்டாள். அவள் பார்த்தது ஒரு கல் அல்ல, கல்லிலிலே. அவள் தன் கண்ணனை கண்டால். நீ கண்ணனையும் பார்க்கவில்லை, ஆண்டாளின் அன்பையும், காதலையும் பார்க்கவில்லை. உன் நாக்கில் இருந்த கலைவாணியை ஓட வைத்து விட்டாய். சனி என்பது எங்கும் இல்லை, உன் நாக்கில் வந்து விட்டது. நீ உன் வார்த்தையால் சுட்டது ஆண்டாளை அல்ல, நீ உனது அஹம்காரத்தின் அக்னிக்கு நீயே எண்ணெய் ஊற்றி விட்டாய். நீ பேசியது அறிவு என்று நினைத்து விட்டாய். அப்பேச்சு உனது வாழ்வின் கீழ்நிலைக்கு செல்லும் முதல் படி. ஆண்டவனை ஏசி, ஏசி ஒருவன் சக்கரத்தில் அமர்ந்து விட்டான் அவன் நாக்கில் இருந்த வாக்கு தேவி பறந்து விட்டால். ஆண்டவனை கல் என்றும், மண் என்றும் பேசியவன் மண்ணோடு மண்ணாக சென்று விட்டான். அவன் உடம்பிலே கல்லை சுமந்து கொண்டு இறந்து விட்டான். திருப்பதி உண்டியலுக்கு காவலன் ஏன் என்று ஒருத்தி கேட்டால், ஆனால் அவள் காலம் வந்து விட்டது போலும், அவளுக்கு எப்பொழுதும் ஒரு காவலன் வெளியில் நிற்க, வார்த்தையை கொட்டுவது எளிது. வைர முத்துவே, நான் உன்னை போலே ஒரு கவி இல்லை. இந்த வார்த்தைகள் ஏன் இதயத்தில் இருந்து வந்த அக்னி. உனது வார்த்தைகள் எரித்தது ஒரு ஆண்டாள் என்ற பத்தினி. மறந்து விட்டாயோ கண்ணகியின் சிலம்பு சக்தியை

அற்புதமணி - கானா
கண்ணன், என்னைக்கும் அதே நிலை தான். இன்று காலையில் ஆண்டாள் படத்தை பூஜை அரையில் பார்த்தவுடன் அடக்க முடியாமல் அழுது விட்டேன். அல்லல் பட்டு அழுத கண்ணீர்... என்ன செய்யும் என்று இந்த அறிவிலிக்கு கூடிய விரைவில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனது தாயார் உணர்த்துவார். அன்று நாம் சிரிப்போம் விரைவில்.

கல்யாண் முருகன் - சிவகாசி
வைரமுத்துவின் கள்ளி காட்டு இதிகாசம் படித்தவன் நான், ஆனால் இப்போது வைரமுத்து பேசியது முற்றிலும் தவறு, அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பேசுவதற்கு முன்னர் யோசிக்க தெரியாத கவிப்பேரரசா நீ?

சின்னமணி பாலன் - தூத்துக்குடி
பன்னிரு ஆழ்வார்களில் மிகவும் போற்றத்தக்கவர் ஆண்டாள் ஆவார். ஆண்டாள் அருளிய தமிழ்ப் பாசுரங்கள் அனைத்தும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கின்றன என்பதை வைரமுத்து போன்றோர் அறியாதது வியப்பை அளிக்கிறது. ஆண்டாளை விமர்சிப்பதும் தமிழை விமர்சிப்பதும் ஒன்றுதான்.

நலன் - சென்னை
ஆண்டாளின் கவிநயம் மற்றும் இலக்கிய நயம் செழுமையான தமிழ் இவற்றை மட்டும் கூறியிருக்கலாம். மேலை நாட்டுக்குகாரன் கருத்து இங்கு யாருக்கும் வேண்டாம்.

ஆனந்த் - சென்னை
வேற்று மதத்தவரைப் பற்றி இவர் பேசியிருந்தால், இந்நேரம் திராவிட மற்றும் மதச்சார்பற்ற பாதுகாவலர்கள் பொங்கியெழுந்து கடும் போராட்டம் நடத்தி, இவரின் கொடும்பாவியை எரித்திருப்பார்கள்.

பாலானி - ஓசூர்
ஆன்மிக சொற்பொழிவாளர்கள், வேத விற்பன்னர்கள் எத்தனையோ பேர் இருக்க, இவரை அழைத்து வந்த ஒருங்கிணைப்பாளர்களைத்தான் குறை கூற வேண்டும்.

மணியன் - ஐதராபாத்
தனக்கு பிடிக்காத கருத்தை ஏன் பொது மேடையில் கூற வேண்டும். என்னதான் இவர் சமாதானம் சொன்னாலும் கோடிக்கணக்கான மக்களை உலுக்கி விட்டது. நீங்களுமா வைரமுத்து?

காசிமணி : சிங்கப்பூர்
ஆண்டாள் மகாலட்சுமியின் அம்சம்... பெரியாழ்வாரின் பக்தியை அனுபவிக்கும் நோக்கமுடைய மகாலட்சுமியின் அவதாரம்... பக்தியால் அறியவேண்டிய ஆண்டாளின் பெருமையை, வைரமுத்து போன்ற பகுத்தறிவுப் பாமரர்கள் அறியமாட்டார்கள்... நாத்திகம் வீட்டுக்குள் ஓகே... வெளியில் வந்து அதிகம் பேசினால் வாலை ஓட்ட நறுக்குவோம்...

தமிழ்செல்வன் - சென்னை
வர வர வைரமுத்துவுக்கு மண்டை கணம் அதிகரித்து விட்டது. இது போன்ற தரங்கெட்ட கருத்துக்களை சொல்லும் இவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். கண்ணதாசன் போன்ற அடுத்தவர் மனம் புண்படாத கவிஞர்கள் எங்கே. இவரை போன்ற நாலந்திர தரம் கொண்ட கருத்துக்களை கூறுபவர்கள் எங்கே. தமிழ் திரை உலகம், இலக்கிய உலகம் இவரை புறக்கணிக்க வேண்டும். இத்தனை எதிர்ப்பு வந்த பின்பம் உப்புக்கு சப்பாணி போல வருத்தம் தெரிவித்திருப்பது சரி இல்லை. மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

எட்வின் - சென்னை
விலைபோனவர்களிடத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும். புறக்கணிக்க பட வேண்டியவர் இந்த பேரரசு.

ஜனார்த் சுந்தரராஜூ - துபாய்
எப்படி இவனுக்கு இந்த துணிச்சல், தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் இவன், தமிழுக்கே அழகு சேர்த்த அன்னை ஆண்டாளை பத்தி பேசியது, மிகவும் தவறு. இதற்கு அந்த பத்னிதாய் தான் தண்டனை தரனும். இவனைப்போன்று உள்ளவர்களை வெல்லுவதற்கு ஹிந்துக்களுக்கு சக்தி போதாது.

ராமசாமிமூர்த்தி - காரைக்குடி
திரு.வைரமுத்து, தமிழ்தாய் வயிற்றில் பிறந்து வைரமாய் ஜொலிக்க வேண்டிய நீர், காவாலி திருட்டு கூட்டத்துடன் சேர்த்து கண்ணாடி கல்லாகி விட்டாய். நமது புலவர்களுக்கு வறுமை தான் சொத்து. தன் மானம் இழக்கமாட்டார்கள். நீர் காசுக்கு உனது புலமையை கழகத்துக்கு விற்றுவிட்டீர். தமிழின் உயிர் நாடி இந்து மதத்தை இழிவு செய்கிறீர்கள்.

ரவி - திருச்சி
ஹிந்து மதம் கொண்டாடும் பெரிய அடியார் ஆண்டாள் அவர்கள். வைரமுத்து அவர்களை பற்றி இப்படி பேசலாமா? வேறு ஒரு சமயத்தை பற்றி இப்படி பேசியிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று வைரமுத்து யோசித்து பார்த்திருக்க வேண்டும். வைரமுத்து செய்தது மன்னிக்க முடியாதது. அனைவரும் இதை கண்டிக்க வேண்டும்.

ராஜேஷ் - டில்லி
உன்னை கவியரசு என்று சொல்லுவதற்கு இனி எல்லோருக்கும் வாய்க்கூசும். இனிமேல் உன்னை கவியரசு வைரமுத்து என்று சொல்லுவதற்கு நாங்கள் வெட்கப்பட வேண்டும். நீ கவியரசு இல்லை திராவிட கட்சி கூட்டத்தில் சேர்ந்த திருடன்

சுந்தர் - சென்னை
தாயை தாசி என்று அழைத்துவிட்டு பிறகு அம்மா உன்னை புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடு என்பாரோ? தாயை தாசி என்றது தவறென்று இந்த தமிழறிஞருக்கு தெரியாதா? மேடையிலே செய்த தவறுக்கு மேடை போட்டல்லவா மணழடியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். இவர் கற்ற தமிழ் அதை இவருக்கும் கற்பிக்க வில்லையா?

தமிழன் - காஞ்சிபுரம்

கஞ்சா வைத்த கண்ணுக்கு கவி பாடிய கவிஞரிடம் காவியம் பற்றி பேச சொன்னால் இப்படி தான் இருக்கும்.. காசுக்காக பாடும் கவிஞரே கருத்தில் குற்றம் இருக்கும் போது வருத்தம் தெரிவித்து தப்பிக்கலாமோ. அம்பை எய்தவன் அமெரிக்கனாம்... கஞ்சா கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

சுந்தர் - சென்னை
இவர் இப்படி பேசியது வியப்பல்ல. அது இவரின் இயல்பை குறிக்கிறது. காலம் காலமாக மக்கள் கோவில் கட்டி வணங்கி வரும் ஆண்டாளை எவனோ சொன்னதாக மேற்கோள் காட்டி வாயினால் மலம் கழிக்கும் வைரமுத்து(?) உன் குணம் அறிந்து உன்னை இளையராஜா வாயிற்படிக்கு வெளியில் வைத்தார். தெய்வம் உண்டென்றால் உன்னை புரட்டிப் போடும்.

சாமுவேல் ஆண்டர்சன்
அடே பாவிப்பயலே. சிறு பிராயத்திலிருந்தே திருப்பாவையும், நாச்சியார் திருமொழியையும் படித்து என் உள்ளம் உருகி, ஆண்டாளை என் சொந்த மகளாக மனதில் வைத்து பூசிக்கின்றேன். தெய்வீக ஆண்டாள் நாச்சியாரை தேவதாசி என்று பேச உனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? உன் தமிழ் இவ்வளவு தாழ்ந்து போயிற்றே. நீ சேர்ந்த இடம் தவறானது. ஆனால் நீ இடத்திற்கு இடம் நிறத்தை மாற்றும் பச்சோந்தி. உனக்கு விருதுகள் ஒரு கேடா? உனக்கு ஞானபீடம் விருது வேறு வேண்டுமா? தெய்வத்தைப் பழித்து நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் ஒரு வார்த்தை கூட பேச இயலாத நிலையை நீ பார்க்கவில்லையா? அவர்களின் தீய கூட்டு உன்னை இப்படிப் பேச வைக்கிறது. உன் உள்ளம் சொல்வதை நீ எழுதியுள்ளாய். அவ்வப்போது நல்லவன் வேஷமும் போடுகிறாய். நம் நாட்டு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சிதைக்கின்ற கூட்டம் அமெரிக்காவில் உள்ளது. அதன் கைக்கூலி நீயோ? உனக்கு தெய்வ தண்டனை விரைவில் நிச்சயம் உண்டு. என் வாழ்நாளில் முதன்முறையாக இப்படி ஒருமையில் நான் எழுதுவது இது ஆகும். என்னால் தாங்க இயலாத கோபம். அதன் காரணமாகவே இப்படிப்பட்ட பதிவு.

ராம் ஜெகன் - மாஸ்கோ
"திருப்பாவை நாயகி" ஆண்டாள் தமிழ் தாயின் தலைமகனென்னும் ஞானச்செருக்கிற்கு உரியவரே... உம் பேச்சதனில் மெய் மறக்கும் பலருள் ஒருவனான என்னுள் எழும் சில கேள்விகள் ... சொல்லாடல் கற்றுத் தேர்ந்த சொற்சிற்பி ஆனாலும்... சபைதன்னில் பேசும் பேச்சில் ஆராய்ச்சி வேண்டாமா...? விருந்தினராய் வந்த நீரே வில்லங்கம் செய்யலாமா...? வார்த்தைகளில் மாயங்கள் செய்ய முயன்று எங்கள் நெஞ்சினில் காயங்கள் செய்து விட்டீரே.... பெற்ற தாயாக இருந்தாலும் பேசலாமா ஆபாசம்... திருப்பாவை நாயகியை தீண்டத்தான் இந்த தீந்தமிழோ... வார்த்தைகளின் வித்தகரே உம் வார்த்தைகள் இது நியாயம் தானா...? உம் வீரியம் புரியா விபரீத பேச்சினிலே... எங்கள் உள்ளமும் புண்ணானது... உங்கள் மீதான மரியாதையும் மண்ணானது... கற்பித்து விடு!

ஆதி
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதின கவிஞர்களுக்கு மத்தியில்..... இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தும் வைரமுத்து ஒரு விசம். நாயே குளிப்பாட்டி நடுவீட்டில் விட்டாலும் அது புழுதில போய் படுத்து புரளுமாம்.

சூர்ய குமார்
தமிழன்னையை இழிவுபடுத்தும் நீ தமிழன் இல்லை...

பாலா மணி
இவர் தமிழினத்தில் பிறந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன்

முகில் மோகன்
ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு வருவதாக எண்ணிக்கொண்டு இந்து மதத்தை என்ன வேண்டுமாலும் பேசலாம் என்ற நினைப்பில் பேசாதீர்கள்... உங்கள் மேல் ரொம்ப மரியாதை உள்ளவர்கள் உங்களால் உங்கள் எழுத்தை வெறுக்க வைக்காதீர்கள்

தண்டபாணி
உமக்கு எதற்கைய்யா வேண்டாத வேலை. எவனோ சொன்னதை மேற்கோள்காட்டி அது என் கருத்தல்ல என்பது போன்று விளக்கம் அளித்து, பின்கால் படும்படி எதற்கு ஓட்டம்...? நீ ஒரு சாமனியாக இருந்தால் உன் அறியாமையை ஏற்றுக்கொள்ளாலாம். நீ ஒரு தேசிய விருது பெற்ற கவிஞனாக இல்லாமல் இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். இனியேனும் சுயபுத்தியுடன் என்னபேசுகிறோம் என்று நினைத்து பேசுங்கள்...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in