Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெகட்டிவ் கேரக்டரில் ஹன்சிகா

11 ஜன, 2018 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Hansika-firstime-in-Negative-role

நடிகை ஹன்சிகா குலேபகாவலி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அவர் திருடியாக நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், "நான் கடவுள்" ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து, காமெடி த்ரில்லர் திரைப்படமாக நாளை பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கிறது. இதில் நடித்திருப்பது பற்றி ஹன்சிகா கூறியதாவது:

எங்கேயும் காதல் படத்திற்கு பிறகு பிரபுதேவா மாஸ்டருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அதில் அவர் என்னை இயக்கினார். இதில் என்னுடன் நடித்திருக்கிறார். இப்போதும் அதே எனர்ஜி குறையாமல் இருப்பது தான் அவரது ஸ்பெஷல். இது புதையலைத் தேடிச் செல்லும் கதை. கதை பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும். நான் இதில் திருடியாக நடித்திருக்கிறேன். ரொம்ப சீரியசாக இல்லை. வேடிக்கையான, ஜாலியான கேரக்டர். முதல் தடவையாக நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர்.

நான் எப்போதுமே பாசிட்டிவானவள். அதனால் எனது கேரக்டரும் பாசிட்டிவாகவே இருக்கும். எல்லா படங்களிலும் அழகை மட்டுமே நம்புவதாக கூறுவதை ஏற்க மாட்டேன். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களில் நடிப்பு திறமையை நிரூபித்திருக்கிறேன். என்னால் காமெடியும் செய்ய முடியும் என்பதை குலேபகாவலியில் காட்டியிருக்கிறேன். நடிப்புக்கு நல்ல ஸ்கோப் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். குலேபகாவலிக்கு பிறகு அதர்வா, விக்ரம் பிரபு படங்களில் நடிக்கிறேன். அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். 2018 எனக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in