Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் யாருக்கு ஆதரவு? விஷால் பதில்

11 ஜன, 2018 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Vishal-reply-who-will-support-in-Politics

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால் தனது மலேசிய கலை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு...

கேள்வி: மலேசிய கலை விழா எப்படி இருந்தது?
விஷால்: மலேசிய கலை விழா சிறப்பாக இருந்தது, ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.

கேள்வி: கலைவிழாவில் மூத்த நடிகர்கள் மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே..?
விஷால்: எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் உரிய மரியாதை தரப்பட்டது. இது மலேசியா வந்த அனைவருக்கும் தெரியும்.

கேள்வி: எஸ்.வி.சேகர் அறக்கட்டளையிலிருந்து ராஜினாமா செய்துள்ளாரே?
விஷால்: அவர் ராஜினாமா செய்ததற்கு காரணம் இருக்கலாம். ஆனால் அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது.

கேள்வி: கமல்ஹாசன் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை பிச்சைக்காரர்கள் என்றும், டிடிவி தினகரனை திருடன் என்றும் விமர்சித்துள்ளாரே?
விஷால்: இதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.

கேள்வி: போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பற்றி?
விஷால்: இது பண்டிகை காலம். போக்குவரத்துக்கு மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அரசு பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

கேள்வி: கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வர இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு யாருக்கு?
இந்த கேள்விக்கு பதில் அளிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அப்போதுள்ள சூழ்நிலையில் அதுபற்றி பரிசீலித்து முடிவெடுப்பேன்.

இவ்வாறு விஷால் பேட்டியளித்தார்.

Advertisement
மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்புமக்களிடம் கையேந்துவதா...? ... சாமி 2 படத்தில் நடிக்காதது ஏன்? - த்ரிஷாவுக்கு நோட்டீஸ் சாமி 2 படத்தில் நடிக்காதது ஏன்? - ...


வாசகர் கருத்து (1)

Sasikumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 ஜன, 2018 - 16:07 Report Abuse
Sasikumar இவனுக்கு பிச்சை எடுக்க நல்லா வரும் அதும் நாடு விட்டு நாடு போய் அதுனால பேசாம இவனை பிச்சைக்காரர்களுக்கு ஆதரவு தர சொல்லலாம் .. நல்லா பிச்சை எடுப்பான் .. இவன் தயவுல யாரும் இல்ல ..யாரும் கேக்க போறதும் இல்ல ... மச்சான் மலேசியால எவ்ளோ பிச்சை எடுத்த
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in