பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. அந்தப்படத்தின் தோல்வியால் அதிதி ராவுக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு விரைவில் வெளியாகவுள்ள 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படத்தை ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார் அதிதி ராவ்.
ஆம்.. மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக அதிதி ராவ் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். முழுமையான தமிழ்ப்படம் போலவே உருவாகியுள்ள இந்தப்படத்தில் பாண்டியராஜன், அவரது மகன் பிருத்வி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, பிளாக் பாண்டி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார்கள்.
கமலின் 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம்-2' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத் ஷைனுதீன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.