விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தொடர் தோல்விகளுக்கு பின்னர் நடிகர் சித்தார்த்தை கொஞ்சம் நிமிர வைத்துள்ள படம், சமீபத்தில் வெளிவந்த "அவள்". த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பேசும்படியாக இருந்தது. தியேட்டரை தொடர்ந்து இப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகிறது. இதை தன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் சித்தார்த்.
தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் நெட்பிளிக்ஸில் பாருங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிடாது என்று கூறியிருந்தார்.
இதனால் கோபமான சித்தார்த், "உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. நீ பாரு, நன்றி!" என பதிலளித்துள்ளார்.
இதையடுத்து மேலும் சில ரசிகர்கள் அவருடன் டுவிட்டரில் வம்புக்கு செல்ல சித்தார்த்தும் பதிலடியாக, "பைரசி ஒரு குற்றம். அதை நியாயப்படுத்துவது சரியல்ல. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் நியாயப்படுத்துவீர்களா? திருடனை திட்டினா தப்பு, திருட்ட பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு! படம் எடுப்பவர்கள் அனைத்து அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்கவே கூடாது? சாரி, நாங்கள் கொடுப்போம். உங்கள் ரிஸ்கில் கலாய்ச்சுக்கோங்க என்று கூறியுள்ளார்.