அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ஏ.ஆர்.ரஹ்மானை தமிழ்நாடு அரசு தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் இந்தியாவின் பொக்கிஷமாக கருதுகிறது. அவருக்கு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் செய்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது சிக்கிம் மாநில அரசு, ரஹ்மானை அந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் அமைச்சருக்குரிய அனைத்து அந்தஸ்துகளும் இதன் மூலம் ரஹ்மானுக்கு கிடைக்கும்.
சிக்கிம் தலைநர் காங்டாக்கில் நேற்று நடந்த குளிர்காலத் திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், ரஹ்மானை, சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக பணியாற்றுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். அதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டர். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது
"சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் தந்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்" என்றார். இன்று அதற்கான அரசு அறிவிப்பு முறைப்படி வெளியாகிறது.