Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்சி தொடக்கம் இப்போது இல்லை: மீண்டும் குழப்பும் ரஜினி

09 ஜன, 2018 - 10:00 IST
எழுத்தின் அளவு:
Political-party-not-now-says-Rajini-at-Airport

ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். எல்லா இடங்களிலும் விருந்து கொண்டாட்டம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு ஆன்லைனில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா "பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில், ரஜினி கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பார்" என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி ரஜினி கட்சி தொடங்குவார்" என்றார். ரஜினியின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன், "கட்சி பெயர், கொடி, சின்னம், கொள்கை எல்லாம் தயார். விரைவில் அதனை ரஜினி முறைப்படி அறிவிப்பார்" என்றார்.

இந்த நிலையில் மலேசிய கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பிய ரஜினியிடம், கட்சி பெயர், கொடி எப்போது? கொள்கை என்ன? எதிர்கால திட்டம் என்ன? எத்தனை பேர் இதுவரை உறுப்பினர்களாகி உள்ளனர், பாபா முத்திரை தான் சின்னமா? என பல கேள்விகளை சரமாரியாக பத்திரிகையாளர்கள் கேட்டனர். எந்த கேள்விக்கும் பதிலளிக்காத ரஜினி, "இப்போதைக்கு இல்லை" என்று மட்டும் கூறிவிட்டு வேகமாக சென்று விட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
பிப்ரவரியில் ஜீவாவின் இரண்டு படங்கள்பிப்ரவரியில் ஜீவாவின் இரண்டு ... இந்திய வம்சாவளி நடிகருக்கு கோல்டன் குளோப் விருது இந்திய வம்சாவளி நடிகருக்கு கோல்டன் ...


வாசகர் கருத்து (36)

kumar - chennai,இந்தியா
09 ஜன, 2018 - 15:18 Report Abuse
kumar ரஜினி ரசிகர்கள் யாரும் குழப்பத்தில இல்ல.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
09 ஜன, 2018 - 15:16 Report Abuse
BoochiMarunthu அரசியலுக்கு வந்துட்டேன் என்று சொன்னால் 100 டிக்கெட்டை 1000 - 3000 விற்கமுடியாது . எப்படியும் மக்கள் கேள்வி கேட்பார்கள் . இந்த 3 வருஷத்தில் சுருட்ட வேண்டியது எல்லாம் சுருட்டி விட்டு , அமைதி ஆகிவிடுவார் . அவர் தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் காவேரி நீர் மேலாண்மை ஏன் அமைக்கவில்லை என்று போராடினால் மக்கள் ஆதரவு உண்டு .
Rate this:
Devaraj - moolekaodu ,சுரிநாம்
09 ஜன, 2018 - 15:04 Report Abuse
Devaraj வியாபாரம் பதிஞ்சு வர வில்லை. பாபா கேட்டது ஒன்னு .. கிடைப்பது பூஜ்யம். அதனால் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று வேதனையில் பாபா இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
09 ஜன, 2018 - 14:47 Report Abuse
Rangiem N Annamalai இனி தினம் ஒரு ரஜினி செய்தி வெளி வந்து கொண்டு இருக்கும் என நான் நினைக்கிறன் .எலேச்டின் முடிந்து தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் போது இமய மலையில் இருப்பார்.எல்லாம் போகட்டும் இவ்வளவு நாள் அரசியலில் இல்லை .இப்போது அரசியலில் உள்ளே உள்ளார் ஆகவே அரசு பேருந்து பிரச்சனையை முடிக்கலாம் அல்லவா ?.ஏன் கருத்து கூறாமல் மலேஷியா சென்று விட்டார் ?.மக்கள் மடையர்கள் அல்ல என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .
Rate this:
Balan Palaniappan - Chennai,இந்தியா
09 ஜன, 2018 - 14:46 Report Abuse
Balan Palaniappan Petti kai maariduchu polirukku.
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in