தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில வருடங்களாகவே ஜீவா நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியின் நிழலைக் கூட தொடவில்லை. அவர் நடித்து கடைசியாக வெளியான படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. கடந்த மே மாதம் வெளியான இந்தப்படம் படு தோல்வியடைந்தது.
இப்படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்து வரும் படம் 'கீ'. அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கும் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, அனைகா சோடி நடித்துள்ளனர். மற்றும், ராஜேந்திர பிரசாத், கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை மைகேல் ராயப்பன் தயாரித்திருக்கிறார்.
சென்சாரில் 'U' சான்றிதழ் கிடைத்துவிட்டநிலையில் 'கீ' படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். 142 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்க, ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் கவனித்துள்ளார்.
இந்த படம் தவிர ஜீவா நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் 'கலகலப்பு-2'. சுந்தர்.சி.இயக்கும் இந்த படமும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகிறது.