மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
பாகுபலி 2 படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் இளவரசி ஆக தன் நடிப்பாலும், அழகாலும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தர் அனுஷ்கா. அந்தப் படத்திற்குப் பிறகு இவர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் பாகமதி. இந்தப் படத்தில் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை அசோக் .ஜி இயக்க தமன் இசையமைத்துள்ளார். ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் இன்று யு டியுபில் வெளியிடப்பட்டது.
படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது பேய்ப் படம் போலத் தோன்றினாலும், முன் ஜென்மம், கடந்த கால நினைவுகள் ஆகியவையும் அடங்கிய ஒரு படம் போலத் தெரிகிறது. படத்தில் மலையாள நடிகர்களான உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் இப்படத்திற்குக் கேரளாவிலும் வரவேற்பு கிடைக்கும்.