சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
பிரபல மலையாள இயக்குனர் கமல் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.
கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து எழுத்தாளராக உருவெடுத்து, 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் 'ஆமி' என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் கமல்.
தற்போது இந்தப்படத்தின் புதிய பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கமல். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2' வில்லன் டொவினோ தாமஸ் நடிக்கிறார். இதற்கு முன் இந்த 'ஆமி கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.