ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2018-ம் ஆண்டின் முதல் தொடர்ச்சியான விடுமுறை நாட்களாக இருக்கும் பொங்கல் விசேஷ நாட்களில் படத்தை வெளியிட பலர் முயற்சித்தனர். ஆனால், கடைசியில் தற்போதைய நிலவரப்படி மூன்று படங்கள் வருவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு படங்கள் வெள்ளிக்கிழமையான 12ம் தேதியே வெளிவருகிறது. அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான 19ம் தேதி இதுவரை யாரும் படத்தை வெளியிட முன்வரவில்லை.
ஆனால், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று புதிய படங்கள் வெளியாக உள்ளன. தொடர்ந்து மூன்று விடுமுறை நாட்கள் வருவதால் அன்றைய தினம் படங்களை வெளியிட்டால் வசூலைப் பெற முடியும். ஜனவரி 26ம் தேதியன்று படங்களை வெளியிட உள்ளதாக இரண்டு படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'டிக் டிக் டிக்' படமும், உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பலர் நடிக்கும் 'நிமிர்' படமும் ஜனவரி 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் மேலும், “இரும்புத் திரை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மதுர வீரன், பாக்மதி” ஆகிய படங்கள் இடம் பெறுமா என்பது இன்னும் சில நாட்களில் உறுதியாகத் தெரிந்துவிடும்.
பொங்கல் படங்களின் வரவேற்பைப் பொறுத்து அதில் சில படங்கள் ஜனவரி 19ம் தேதியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.