வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினி அரசியலுக்கு வருகிறார். அவரது கட்சி பெயர் என்னவாக இருக்கும், கொடி எப்படி இருக்கும், சின்னம் எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக். ரஜினி பாபாவின் தீவிர பக்தர். அவரது பேவரிட் முத்திரையை அவர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும்போது பின்னணியாக பயன்படுத்தினார். ரஜினி மக்கள் மன்றத்திலும் இந்த முத்திரையே லோகோவாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த பாபா முத்திரை தான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கப்போகிறது என்று கருதுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த முத்திரை எங்கள் நிறுவனத்தின் லோகோ என்று மும்பையை சேர்ந்த வாக்ஸ்வெப் சமூக செயல்பாட்டு நெட்ஒர்க் என்ற நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் யாஸ் மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்த நிறுவனம் தொடங்கி 18 மாதங்களே ஆகிறது என்பதும் ரஜினி பாபா முத்திரையை பாபா படத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.