Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி லேட்; ஆனால் லேட்டஸ்ட் : லாரன்ஸ்

08 ஜன, 2018 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Rajini-late-but-latest-in-Politics-says-Raghava-lawrence

ரஜினி அரசியலுக்கு லேட்; ஆனால் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார். கட்சியின் பெயர், கொள்கை, சின்னம், கொடியை அறிமுகம் செய்த பின் மற்ற அரசியல்வாதிகளுக்கு தலைசுற்றும், என, மதுரையில் ரஜினி ரசிகர் மன்ற விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.

ரஜினி, டிச.,31ல் அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். ரஜினி மன்றம் என்ற பெயரில் இணையதளம், அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கையும் நடக்கிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு மதுரை பொய்கைகரைப்பட்டியில் ரசிகர்கள் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. வா தலைவா வா என ரஜினிக்காக ஒரு பாடலை வெளியிட்ட நான், அறிவிப்பு வந்த அன்று வீட்டுக்குள் குத்து டான்ஸ் ஆடினேன். வெளிப்படை அரசியல், சொன்னதை செய்யவில்லை என்றால் அரசியலில் இருந்து
விலகுவேன், தொண்டர்கள் தேவை இல்லை. காவலர்கள் தான் தேவை என ரஜினி கூறியதை பார்க்கும் போது இவர் சாதாரணமாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை.

ரஜினி கட்சியில் பதவி வேண்டாம். கடைசி வரை காவலனாக இருந்து அவர் கூறுவதை செய்வேன். மனிதனுக்கு உடம்பு நிரந்தரம் இல்லை. மனசாட்சி தான் என்றும் நிரந்தரம். அது தான் கடவுள் என அடிக்கடி ரஜினி கூறுவார். அதை தான் அவர் ஆன்மிக அரசியல் என்கிறார். மனசாட்சி கூறுவதை கேட்டு அரசியலில் ஈடுபடுவது மதவாத அரசியல் இல்லை.

ரஜினி அரசியலுக்கு லேட்; ஆனால் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார். மதுரை மண் எப்போதும் அரசியலுக்கு முக்கியத்தும் தரும் மண். அதனால் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி இங்கேயே கட்சி பெயர், சின்னம், கொடியை ரஜினி அறிமுகப்படுத்துவார் என்று நம்புகிறேன். அதை பார்த்து மற்றவர்களுக்கு தலை சுற்றப்போகிறது என்றார் ராகவா லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in