ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
2009ல் ஒய் என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்த பேபி ஷாமிலி, பின்னர் தனுஷின் கொடி படத்தில் நடிக்கயிருந்தார். ஆனால், திரிஷா அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததால் தனக்கு பெரிதாக பர்பாமென்ஸ் பண்ண வாய்ப்பு இருக்காது என்று அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதனால் ஷாமிலி நடிக்கயிருந்த வேடத்தில் பிரேமம் அனுபமா பரமேஸ்வரன் நடித்தார்.
அதன்பிறகு வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்தார் ஷாமிலி. அந்த படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தெலுங்கில் நாக செளர்யா நாயகனாக நடிக்கும் அம்மமா ஹரி இல்லு -என்ற படத்தில் நடித்து வருகிறார் . சுந்தர் சூர்யா இயக்கும் இந்த படத்தில் பக்கத்து வீட்டு பெண்ணைப்போன்று எளிமையான ஒரு நாயகியாக நடிக்கிறார் ஷாமிலி. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.