பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசை அமைப்பாளர் யுவன் இப்போது அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் ஆனவர் இப்போது நடிகராகவும் ஆகிவிட்டார். அதோடு ஒரு பாட்டுக்கும் ஆடுகிறார்.
மெட்ரோ படத்தில் அறிமுகமான சிரிஷ் அடுத்து நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. சாந்தினி ஹீரோயின். அனுபமா குமார், சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பர்மா படத்தை இயக்கிய தரணிதரன், வாசன் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார். அவரே இயக்கவும் செய்கிறார். யுவன் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் புரமோசனுக்காக ஒரு பாடலுக்கு இசை அமைத்து தானே பாடியுள்ளார் யுவன். இந்த பாடலில் படத்தில் நடிக்காத ஒருவரை ஆட வைக்க முயற்சித்தார் இயக்குனர் தணிதரன். நடன இயக்குனர்கள் சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் பாட்டுக்கு இசை அமைத்து பாடியிருக்கும் யுவனை ஆட வைத்தால் என்ன என்று முடிவு செய்தார்கள். தனக்கு ஆட வராது என்று முதலில் மறுத்த யுவன் பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக முறையாக ஒத்திகையில் கலந்து கொண்டு நடத்தி பயிற்சி எடுத்துக் கொண்டு ஆடியுள்ளார். இந்த பாடலை தனியாக விழா நடத்தி வெளியிட தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.