Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி? | பாகுபலி படங்களின் வசூலை முறியடிக்குமா 2.0 | சீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் எதிர்ப்பு | இலவசமாக நடித்துக் கொடுத்த நடிகர்கள் | கியூப் நிறுவனத்திற்கு பதிலாக தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் புதிய நிறுவனம் துவக்கம் | கோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு தொடர்பில்லை : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை | போதையில் பாபிசிம்ஹா நண்பருடன் கட்டிபுரண்டு சண்டை | அடல்ட் காமெடி பட ஹீரோயின் ஆனார் சுனிதா | தீதும் நன்றும்: குறும்படத்திற்கு விருது பெற்றவர் இயக்கும் திரைப்படம் | தியேட்டர்களில் குப்பை கதை திருட்டு: அமைச்சரிடம் புகார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசியாவில் கோலாகலமாக முடிந்த நட்சத்திர கலை விழா

07 ஜன, 2018 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Natchathira-Vizha-2018-in-Malaysia

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட நிதி திரட்டும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடந்தது. ஜன., 5ம் தேதி, நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி மற்றும் மூத்த நடிகைகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து ஜன.,6 ம் தேதி மலேசிய நேரப்படி பிற்பகல் 12 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் புக்கிட் ஜலால் விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது.

சிவகார்த்திகேயன் அணி சாம்பியன்
மலேசிய மற்றும் தமிழ்நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 6 அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதிப்போட்டிக்கு சிவகார்த்திகேயன் தலைமையிலான திருச்சி டைகர் அணியும், சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம் அணியினரும் மோதினர். அணி கேப்டன்கள் விலை உயர்ந்த மோட்டார் பைக்கில் பின்னால் நின்று கொண்டு மைதானத்தை சுற்றி வந்தனர். சிவகார்த்திகேயன் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூரியும் சிவா அணியின் வெற்றிக்கு ஓடி ஓடி ரன் எடுத்தனர்.

டீசர் - டிரைலர் வெளியீடு
இதைத்தொடர்ந்து ஜூங்கா, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இரும்புத்திரை, சண்டைகோழி 2, பக்கா, உத்தரவு மகாராஜா போன்ற படங்களின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடபட்டது.

மூத்த நடிகைகள் கவுரவிப்பு
மூத்த நடிகைகள் சரோஜா தேவி, லதா, பிரபா, சச்சு, ராஜஸ்ரீ, ஜெயசித்ரா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாரதி விஷ்ணுவர்தன், செம்மீன் ஷீலா, ஜெயமாலினி, சகுந்தலா, சத்யபிரியா, குட்டி பத்மினி, ஹேமா சவுத்ரி ஆகியோருக்கு ஐசரி கணேஷ், 1 சவரன் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தார்.

ஹெலிகாப்டரில் இறங்கிய ரஜினி - கமல்
மாலை 4 மணிக்கு ரஜினி, கமல் இருவரும் இணைந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர். நாசர் மற்றும் விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவர்களை வரவேற்றனர்.

ஆர்யா அணி சாம்பியன்
மாலை கிரிக்கெட் போட்டி மற்றும் ஆர்யா அதர்வா( கேப்டன் ஜெயம் ரவி மிஸ்ஸிங்) அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை ரஜினி ரசித்து பார்த்தார். ஆர்யா அணி வென்றது. யோகிபாபு காமெடியனாக நாம் பார்த்திருப்போம், ஆனால் அவர், கால்பந்து வீரர் என்பதை நேற்று பார்க்க முடிந்தது.

விஜய் - அஜித் ஆப்சென்ட்
300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டாலும், அஜித், விஜய், தனுஷ், பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, வடிவேல் போன்ற பிரபல நடிகர்கள் கலந்து கொள்ளாதது ஏமாற்றம். அதேசமயம் அதிக ரசிகர்கள் கூடிய நிகழ்ச்சி இது என சான்று வழங்கப்பட்டது.

நிதியுதவி
நடிகர் சங்கம் கட்டட கட்ட, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரூ.2.5 கோடியும், லைகா ரூ.1 கோடியும், நடிகை விஜயகுமாரி ரூ. 5 லட்சமும் நிதியுதவி வழங்கினர்.

நடிகைகள் நடனத்தில் சாயிஷா ஆடிய நடனம் மட்டுமே கவர்ந்தது. மற்றபடி ஸ்ரீதிவ்யா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் பயிற்சி இல்லாமல் வெறுமனே வந்து ஆடியது அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை.

இவ்வளவு களேபரங்களும் முடிய வெகு நேரம் ஆகிவிட்டது. ரஜினி, கமல் பேச்சைக் கேட்க அத்தனை மலேசியா மக்களும் காத்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத், ஹரிஹரன் பாடல்கள் பாடிய பிறகு இரவு பத்து முப்பதுக்கு மேல் கமல், ரஜினி மேடைக்கு அழைக்கபட்டனர். அவரிடம் விவேக் சில கேள்விகள் கேட்டார். இருவரும் அவர்களது ஸ்டைலில் பதிலளித்தனர்.

Advertisement
தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் : ரஜினியின் அதிகபட்ச ஆசைதமிழக மக்களை நன்றாக வாழ வைக்க ... “மதம்” பிடிக்காமல் பார்த்து கொள்வேன் - கமல் “மதம்” பிடிக்காமல் பார்த்து ...


வாசகர் கருத்து (1)

Bava Husain - riyad,சவுதி அரேபியா
07 ஜன, 2018 - 14:29 Report Abuse
Bava Husain இதில் நடிகை.விஜயகுமாரி மட்டுமே சிறந்தவர்.... அவரைப்போல் மற்றவர்களும், அவரவர்களால் முடிந்த நிதியை தன் சங்கத்திற்காக அளித்திருப்பார்களேயானால், இப்படி மற்ற நாட்டில் பிழைக்க சென்றவர்களிடம் கையேந்தும் நிலை வந்திருக்காது....ஹூம்...பணம் இருப்பவனிடம் கொடுக்க மனம் இருக்காது, மனம் இருப்பவனிடம் பணமிருக்காது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in