Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் : ரஜினியின் அதிகபட்ச ஆசை

07 ஜன, 2018 - 10:02 IST
எழுத்தின் அளவு:

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட 300 கலைஞர்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நிறைவுப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஸ்பெஷலாக அமைந்தது. நடிகர் ரஜினியை மேடையில் அறிமுகம் செய்து வைத்த விவேக், அவரிடம் பல கேள்விகள் கேட்டார். அதற்கு கூலாக பதிலளித்தார் ரஜினி. முன்னதாக நடிகை லதாவும் அவரிடம் சில கேள்விகள் கேட்டார், அதற்கும் அவர் நிதானமாக பதிலளித்தார். ரஜினி அளித்த பதில்கள் விபரம் வருமாறு...

நடிகை லதாவின் கேள்விகள்...

70களில் இருந்து உங்களை பார்க்கிறேன். இவ்வளவு பெயர், புகழ் கிடைத்தும் எளிமையாக இருக்க என்ன காரணம்?
எனக்கே தெரியவில்லை.

தவறாக எண்ண வேண்டாம், டீன் ஏஜில் காதலித்தது உண்டா?
பள்ளியில் படிக்கும் போது ஒரு காதல் வந்தது, அதை மறக்க முடியாது. நிறையபேருக்கு முதல் காதல் வெற்றியும் பெற்றிருக்கும், தோல்வியும் அடைந்திருக்கும். அந்தவகையில் நான் தோல்வி அடைந்தேன்.

அவங்க பேர் நினைவு இருக்கா?
நினைவு இல்லாமல் இருக்குமா. மன்னிக்கவும் சாரி என்று சொல்லி முடித்தார்.

தொடர்ந்து விவேக் கேள்வி கேட்கும் முன்னர் கஷ்டமான கேள்விகள் வேண்டாம் என்றார் ரஜினி.

பைரவி - இந்திரன், சிவாஜிராவ் - ரஜினிகாந்த், நடிகர் - தலைவர் இந்த பயணம் பற்றி?
என் 45 வருட சினிமா பயணத்தில், படங்கள் மூலம் முடிந்த அளவு நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லியிருக்கிறேன்.

உங்கள் நடிப்பை தூண்டியது ஸ்டைலா...? இல்லை கே.பி.யா.?
இப்போது நான் எப்படி இருக்கிறேனோ, அப்படித்தான் எப்போதும் இருக்கிறேன். கர்நாடகாவில் பஸ்ஸில் வேலை பார்த்த போது ஆண்கள் பஸ்ஸில் பின்னாலும், பெண்கள் முன்னாலும் அமருவார்கள். நான் டிக்கெட் கொடுத்துவிட்டு முன்பக்கம் வந்துவிடுவேன். அப்போது எனக்கு நிறைய முடி இருக்கும். ஆகையால் முடியை ஸ்டைலாக கோதிவிட்டு கொண்டே இருப்பேன். நான் டிக்கெட் கொடுக்கும் ஸ்டைல் எல்லாவற்றையும் கே.பி., பார்த்துள்ளார். டேய் சினிமாவுக்கு இந்த ஸ்டைல் புதுசு, நீ போனால் ஜனங்களுக்கு பிடிக்கும் இதை எப்பவும் மாற்றாதே என்று அட்வைஸ் செய்தார். அதை அப்படியே தொடருகிறேன்.

உங்களுடைய குறைந்தபட்ச ஆசை என்ன? அதிகபட்ச ஆசை என்ன?
குறைந்தபட்சம் ஒரு ஸ்கூட்டர் வாங்கனும், 2 பெட்ரூம் உள்ள அபார்ட்மென்ட் வாங்கனும், ஒரு டீசன்ட் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசை. அதிகபட்சமா, என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பது தான்.

எப்போது மகிழ்ச்சியாக, எப்போது கஷ்டமாக உணர்ந்துள்ளீர்கள்?
படம் ஹிட் ஆனால் ஜாலியா, சந்தோஷமாக இருந்திருக்கிறேன். படம் சரியாக போகவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கிறேன். வாழ்க்கையில் நிறைய சந்தோஷமும், கண்ணீரும் விட்டிருக்கிறேன்.

அந்த பட்டர் பிட்டர் வசனங்களை பேசி காட்ட முடியுமா?
சாரி மறந்து விட்டேன்..

பொது வாழ்க்கைக்கு வரும் போது குடும்பம் சுகமா? சுமையா?
பொதுவாக சொல்லி விட முடியாது. தனி நபர் வாழ்க்கையை பொருத்தது.

கட்டம் சரியில்லை (ஜோதிடம்) என்று சும்மா இருக்கனுமா, இல்லை முயற்சி பண்ணி பார்ப்போமே என்று உழைக்கனுமா?
ஜோதிடம் புராண காலத்தில் இருந்தே இருக்கிறது. அதை யார் சொல்றாங்க என்பது முக்கியம். அதற்காக ஜோதிடத்தை கேட்டுக் கொண்டு சும்மா உட்கார முடியாது. என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும். என்ன கிடைக்குமோ அது கிடைக்கும். கிடைப்பது கிடைக்காமல் போகாது. ஆண்டவன் கொடுத்த தொழிலில் நாம் நாணயமா, நேர்மையா செய்திட்டு இருந்தால் எல்லாமே நமக்கு கிடைக்கும்

96-ல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது (அரசியல்) அதை தவற விட்டதாக நினைத்தது உண்டா?
ஒரு செகண்ட் கூட வருத்தப்பட்டது கிடையாது..

முதல் முறையாக மலேசியா பயணம் செய்தது பற்றி?
1977 நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்கு நானும், கமலும் வந்திருந்தோம். எனக்கு அதுதான் முதல் முறை. அப்போது கமல் பெரிய நடிகர். நான் அப்போது தான் சினிமாவுக்கு வந்தேன். கமலை அழைத்து செல்ல தனி கார் வரும், ஆனால் ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் அழைத்துசெல்வார். அரவணைத்து என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டார். சூட்டிங் முடிந்த அன்று நானும், கமலும் இரவுகளில் மலேசியாவில் ஜாலியா சுற்றியிருக்கிறோம். காலை நான்கு மணிக்கு வந்து தூங்குவோம். கேபி சார் வருவாங்க. என்ன இந்த பசங்க இப்படி பண்றாங்க என்று... அப்படியே பேசிட்டு போய்டுவாங்க. கமலும் நானும் இதை மறக்கவே மாட்டோம். அருமையான அனுபவம்.

வாழ்வின் நிறைவில் நீங்கள் என்னவாக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?
ஒரு நடிகனாக வந்தேன் மகிழ்வித்தேன். நடிகனாக போய்ட்டேன் என்று என் வாழ்க்கை முடிந்து விட கூடாது என நினைக்கிறேன்.

உலக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தாய், தந்தை, குடும்பம் ரொம்ப முக்கியம். அவர்கள் தான் தெய்வங்கள். முதலில் நீங்கள் அதை செய்தால், உங்கள் பின்னால் எல்லாமே வரும். முக்கியமாக இளைஞர்கள் தாய் தந்தையை வணங்குங்கள். அவர்களை சந்தோஷப் படுத்துங்கள், ஆண்டவன் உங்களை சந்தோஷப் படுத்துவார்.

இவ்வாறு ரஜினி பேசி முடித்தார்.

Advertisement
சூர்யாவுக்கு 2 ஜோடி, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவிசூர்யாவுக்கு 2 ஜோடி, ரகுல் ப்ரீத் ... மலேசியாவில் கோலாகலமாக முடிந்த நட்சத்திர கலை விழா மலேசியாவில் கோலாகலமாக முடிந்த ...


வாசகர் கருத்து (11)

Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
08 ஜன, 2018 - 07:33 Report Abuse
Makkal Enn pakam இன்றைய நிலையில் தமிழ்நாடு பிழைப்பது இவர் கையில்தான் இருகிறது. கண்டிப்பாக இருக்கும் மூன்றாண்டுகளில் மங்குணிகள் தமிழ்நாட்டை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். வேறு யார்வந்து தமிழ்நாட்டை காப்பற்ற முடியும்?
Rate this:
sun - Atlanta,யூ.எஸ்.ஏ
08 ஜன, 2018 - 00:15 Report Abuse
sun Dear Fellow tamilians, please apply thought and knowledge, do not apply emotion in politics
Rate this:
sun - Atlanta,யூ.எஸ்.ஏ
08 ஜன, 2018 - 00:12 Report Abuse
sun First, make your employees (School, Travel Agency and other businesses) to live happily with sufficient salary. Then talk about others.
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஜன, 2018 - 14:53 Report Abuse
Swaminathan Nath நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் உத்தமரை ஏன் சிலர் எதிரிகின்றனர், ஊழல் கட்சிகள் ஒழிய வேண்டும், வாழ்த்துக்கள் ரஜினி,.
Rate this:
venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு
07 ஜன, 2018 - 12:46 Report Abuse
venkat நீங்க ஒதுங்கி இருந்தாலே போதும் நாங்கள் நல்லா வாழ்வோம்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in