மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர விழா 2018 நிகழ்ச்சிக்கு, நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமார், அவருடைய மனைவி சீனியர் நடிகையான ராதிகா சரத்குமார் மற்றும் முன்னாள் செயலாளர் ராதாரவி ஆகியோர் அழைக்கப்படவில்லை.
மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர விழா பற்றி நடிகை ராதிகா சரத்குமாரிடம் சில ரசிகர்கள் நீங்கள் ஏன் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்டதற்கு, தாங்கள் அழைக்கப்படவில்லை என ராதிகா பதிலளித்திருக்கிறார். மேலும், அது தொடர்பாக மேலும் சிலர் ராதிகாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்து அவர்களது பதிவுகளையும் ராதிகா ரிடுவீட் செய்துள்ளார்.
சரத்குமார் ஆதரவு நடிகர்களான சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. விஜய், அஜித் நிச்சயமாகக் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் சென்றுள்ள நிலையில் அவரது மருமகன் தனுஷ் செல்வது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இருந்தாலும் பல முன்னணி நடிகர்கள் இந்த விழாவிற்குச் சென்றுள்ளார்கள். முன்னணி நடிகைகள் பலர் சென்றதாகவும் தெரியவில்லை.