ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த முன்னாள் முதல்வரும், பிரபல தெலுங்கு நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் தெலுங்கில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தேஜா இயக்கும் இந்த படத்தில் என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். அதையடுத்து இன்னொரு ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையிலும் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் நடிக்க மம்மூட்டியிடம் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் மறைந்த மற்றுமொரு முன்னணி நடிகரும், நாகார்ஜூனாவின் அப்பாவுமான நாகேஸ்வரராவின் வாழ்க்கை வரலாறு கதையிலும் ஒரு படம் தயாராகிறது. வம்சி கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் நாகேஸ்வரராவ் வேடத்தில் ராணாவை நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாக உள்ளது.