ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம் ஒரு படத்திற்கு 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் நடித்து வந்த மோகன்லால், தற்போது பட எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு ஒரே படத்திற்காக, அதன் பிரமாண்டத்திற்காக கால்ஷீட்டுகளை வாரி வழங்கி நடித்து வருகிறார். மோகன்லால் நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 130 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது 'புலி முருகன்' படத்திற்குத்தான்.
அதேபோல தற்போது மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் 'ஒடியன்' படத்திற்கு சுமார் நூறு நாட்கள் அவரை கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் மோகன்லால். இதில் தற்போதுவரை கிட்டத்தட்ட 70 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இன்னும் இருபது நாட்களுக்கு மேலான படப்பிடிப்பு நடத்தினால் தான் மொத்த படமும் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கும் இந்தப்படத்தில், பிளாக் மேஜிசியனாக நடிக்கும் மோகன்லால் தனது உடல் எடையை 15 கிலோ வரை குறைத்து 3௦ முதல் 65 வயது வரையான தோற்றங்களில் நடித்து வருகிறார்.