ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், 'ஜெயம்' ரவியுடன் நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார்.
'டிக் டிக் டிக்' படத்திற்காக கதாநாயகி தேடலில் ஈடுபட்டிருந்த இயக்குநர் சக்தி சரவணன், நிவேதாவை பார்த்த ஐந்தாவது நிமிடமே அந்த கேரக்டருக்காக தேர்ந்தெடுத்தாராம். இந்த ஒரு காரணத்துக்காகவே டிக் டிக் டிக் படத்தில் சண்டை காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்து துணிச்சலாக நடித்தாராம்.
டிக் டிக் டிக் படத்தில் 'ஜெயம்' ரவி மகன் ஆரவ் நடித்துள்ளான். அவன் பெரிய நடிகனாகி அவனது 100-ஆவது படத்தில் நானும் பாட்டியாக நடிக்க வேண்டும்'' என்று ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் நிவேதா!
டிக் டிக் டிக் படம் தவிர வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி படத்திலும் நடித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். நான் மதுரைப் பொண்ணு என்று சொல்லி வந்த நிவேதா பெத்துராஜ், வெங்கட் பிரபுவின் டீமில் இணைந்த பிறகு வேற லெவலுக்குப் போய்விட்டாராம்.