Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமல், விஷாலின் அரசியல் வரவு நல்வரவாகட்டும் : சூர்யா வாழ்த்து

05 ஜன, 2018 - 10:00 IST
எழுத்தின் அளவு:
Suriya-wishes-to-Rajini,-kamal,-Vishals-Political-entry

இன்றைய தேதியில் அரசியலுக்கு வரும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பது ரஜினி, கமல், விஷால் ஆகியோருக்கு தான். ரஜினியும், கமலும் உறுதியாக அறிவித்து விட்டார்கள். விஷால், ஆர்.கே.நகர் தேர்தல் மூலம் அரசியல் வெளிப்பாட்டை குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த மூவரின் அரசியல் வரவும் நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார் சூர்யா.

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள, தானா சேர்ந்த கூட்டம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி 12ந் தேதி வெளிவருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார், விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது இதில் கலந்து கொண்டு சூர்யா பேசியதாவது:

இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் தான் பண்ண முடிகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட வேண்டியது இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியலில் தங்கள் பயணத்தை தொடங்கியிருக்கும் ரஜினி சார், கமல் சார், விஷாலின் வரவு நல்வரவாகட்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

என்னுடைய வாழ்கைக்கு ஒவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியமோ, அதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். அதனால் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி. என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கிறது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற டிஸ்க்ளைம்பர் கார்டு இந்தப் படத்தில் வராது அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.

விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் தம்பி ராமய்யா, சுரேஷ் மேனன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in