தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பார்வதி எந்த நேரத்தில் மம்முட்டிக்கு எதிராக வார்த்தைகளை விட்டாரோ, தெரியவில்லை, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து சம்பாதித்து வருகிறார். ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சூனா பானா வடிவேலு பாணியில், தான் தைரியமாக இருப்பதுபோல ஸ்டேட்மெண்ட் கொடுத்து சமாளிக்கிறார் பார்வதி.
சமீபத்தில் இவரும் பிருத்விராஜூம் ஜோடியாக நடித்துள்ள 'மை ஸ்டோரி' படத்தின் பாடல் யூ டியூப்பில் வெளியாகி கிட்டத்தட்ட 12 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டதை விட சுமார் ஒன்றரை லட்சம் நபர்களால் வெறுக்கப்பட்டுள்ளது (டிஸ்லைக்) அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இருந்தாலும் “இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதே பெருமையான விஷயம். ஒவ்வொருவரின் உண்மையான முகங்கள் இப்போதுதான் வெளிப்பட்டு வருகின்றன. அமைதியாக உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே அனைத்தையும் கவனித்து வருகிறேன்” என டுவீட் செய்துள்ளார்.