'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென் கொரிய படமான "ஓடி டூ மை பாதர்" படத்தை தழுவி, ஹிந்தியில் "பாரத்" என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். சல்மான் - அலி அப்பாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.
பாரத் படம் இயக்குவது பற்றி அலி அப்பாஸ் கூறுகையில், சல்மான் மூலம் தான் பாரத் பட வாய்ப்பு வந்தது. ஓடி டூ மை பாதர் படத்தை பார்த்துவிட்டு சல்மான் என்னிடம் இந்தப்படம் பிடித்திருப்பதாக சொன்னார். என்னையும் இப்படத்தை பார்க்க சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. இப்படத்தை அப்படியே என்னால் உருவாக்க முடியாது. அந்தப்படத்தின் கதையை எடுத்து கொண்டு நான் பாரத் படத்தை இயக்குகிறேன். இப்படத்திற்கான வேலையை மார்ச் முதல் துவங்குகிறேன் என்றார்.
பாரத் படத்தை அதுல் அக்னி கோத்ரி மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். 2019-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது படம் ரிலீஸாகிறது.