வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
சினிமாவில் எப்படியேனும் ஜெயிக்க வேண்டும் என்று நடிகர் அசோக் செல்வனும் எப்படி எப்படியோ நடித்து பார்க்கிறார், ஆனால் ஒன்றும் கைகூடவில்லை. போதாகுறைக்கு சூர்யாவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மீடியாக்களையும் சாடி வருகிறார். அசோக் செல்வனை வைத்து 'ஹவுஸ் ஓனர்' என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ஆனால், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்தப் படம் அப்படியே முடங்கிப்போனது.
இதனால் அப்செட்டான அசோக் செல்வன் தனக்கு நெருக்கமானவட்டாரத்தில் வாய்ப்பு தேடும் படலத்தில் ஈடுபட்டார். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. 'மெட்ரோ' என்ற படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷணன் இயக்கும் அடுத்தப்படத்தில் அசோக் செல்வனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப்படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு 'ஆக்சிஜன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மூன்று கெட்-அப்களில் நடிக்கிறாராம் அசோக் செல்வன்.