ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பவன் கல்யாண் நடித்து வெளி வர இருக்கும் 'அஞ்ஞாதவாசி' டீசர் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் முறையாக யு டியூபில் பெரிய சாதனை படைத்த டீசராக முதல் இடத்தைப் பிடித்தது. அந்த டீசருக்கு 24 மணி நேரத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்தன. இருந்தாலும், தமிழ்ப் பட டீசரான 'மெர்சல்' சாதனையை 'அஞ்ஞாதவாசி'யால் முறியடிக்க முடியவில்லை.
தெலுங்குத் திரையுலகத்தில் பவன் கல்யாண் ரசிகர்களும், அல்லு அர்ஜுன் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இத்தனைக்கும் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் இருவரும் நெருங்கிய உறவினர்கள்தான். இருப்பினும் அவர்களது ரசிகர்களது மோதலைத் தடுக்கவே முடியாது. சில நிகழ்ச்சிகளில் பவன் கல்யாண் பெயரை அல்லு அர்ஜுன் குறிப்பிடாமல் பேசியது தான் இருவரது ரசிகர்களுக்குமான சண்டைக்குக் காரணம்.
அல்லு அர்ஜுன் நடித்து ஏப்ரல் மாதம் வெளிவர உள்ள 'நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா' படத்தின் டீசர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த டீசரால் 'அஞ்ஞாதவாசி' டீசரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 24 மணி நேரத்தில் 27 லட்சம் பார்வையை மட்டுமே கடக்க முடிந்தது. யு டியூப் மற்றும் பேஸ்புக் இரண்டும் சேர்த்து 29 மணி நேரத்தில் 1 கோடி பார்வையை இந்த டீசர் பெற்றுள்ளது.
பக்கா ஆக்ஷன் அதிரடியாக இருக்கும் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' டீசரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து வருகிறார்கள்.