Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு ஏ.ஆர்.ரகுமான் ? அஜித்துக்கு யார் ?

03 ஜன, 2018 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Who-will-music-to-Ajith?

கடந்த வருடத்தில் அஜித் 'விவேகம்' படத்திலும் விஜய் 'பைரவா, மெர்சல்' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். இந்த வருடத்தில் இவர்கள் இருவரும் நடித்து ஒரு படம் மட்டுமேதான் வெளியாகும்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், படத்தின் இசையமைப்பாளர் யார், படத்தின் நாயகி யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 'விஸ்வாசம்' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி யுவன், 'விஸ்வாசம்' படத்திற்கு இசையமைக்கவில்லை எனத் தெரிகிறது. அதனால், இயக்குனர் சிவா மீண்டும் அனிருத் பக்கம் போவாரா அல்லது வளர்ந்து வரும் இசையமைப்பாளர் யாருக்காவது வாய்ப்பு கொடுப்பாரா என்பது தெரியவில்லை.

இதனிடையே, விஜய் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் அது பற்றிய அறிவிப்பும், படத்தின் நாயகி யார் என்பது பற்றியும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

அஜித், விஜய் இருவரது படமும் ஒருசேர படப்பிடிப்பு ஆரம்பமாகி, தீபாவளி சமயத்தில் வெளியாகலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in