ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கிய லோபர் என்ற படத்தில் அறிமுகமானவர் திஷா பதானி. பின்னர் ஹிந்தி சினிமாவுக்கு சென்ற அவர் எம்.எஸ்.தோனி உள்பட சில படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது டைகர் ஷெராபுடன் பாஹி-2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்தான், சுந்தர்.சியின் சங்கமித்ராவில் நாயகியாக நடிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
திஷா பதானியும், டைகர் ஷெரப்பும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் வெளி இடங்களில் சுற்றி திரிந்த போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இருவரும் புத்தாண்டை இலங்கையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இருவரும் தனித்தனியாக கடற்கரையில் நிற்பது போன்று தங்களது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போட்டோவை வெளியிட்டுள்ளனர். திஹா பதானி, கவர்ச்சியான பிகினி உடையுடன் உள்ளார். டைகர் ஷெரப் தனது சிக்ஸ் பேக் உடலுடன் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார்.
இருவரும் தனித்தனியாக புத்தாண்டை கொண்டாட சென்றார்கள், அல்லது ஒன்றாக சென்று போட்டோவை மட்டும் தனித்தனியாக இருப்பது போன்று வெளியிட்டுள்ளார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.