அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள மூன்றாவது படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது.
இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைத்தது குறித்து டைரக்டர் ஷங்கர் கூறுகையில், ரஜினியுடன் வேலை செய்வதே ஒரு மேஜிக் மாதிரி தான். அவருடன் சிவாஜி, எந்திரன், 2.O என மூன்று படங்களில் பணியாற்றி விட்டது மகிழ்ச்சியாக உள்ளது. அவரை வைத்து படம் பண்ண நான் நெருங்குவதற்கு 11 ஆண்டுகள் ஆகி விட்டது. சூப்பர் ஸ்டாரை நெருங்குவது அவ்வளவு கடினமாக இருந்தது. இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பே நான் அவரை சந்தித்திருந்தால், மேலும் மூன்று படங்கள் அவரை வைத்து இயக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பேன் என்கிறார் டைரக்டர் ஷங்கர்.