பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹெ படம், கடந்த டிச., 22-ம் தேதி வெளியானது. சல்மான்கான், கத்ரீனா கைப் நடிக்க, அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்தார். ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக சிறப்பாக உள்ளது. இப்படம் இதுவரை ரூ.250 கோடி வசூலித்திருக்கிறது. இதனால் கத்ரீனா மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
இதுகுறித்து கத்ரீனா கூறுகையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிறையபேர் என்னையும், படத்தில் எனது கேரக்டரையும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக எனது ஆக்ஷ்ன் காட்சியை வெகுவாக பாராட்டுகின்றனர். சல்மான் கானின் படத்தில் என்னுடைய கேரக்டரும் வலுவாக அமைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.