விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
மறைந்த சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், பாலிவுட்டில் தயாரித்த படம், "ஹாத்தி மேரா சாத்தி". ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிக்க, எம்.ஏ.திருமுகம் இயக்கினார். யானைகளை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.
தமிழிலும் எம்ஜிஆர்., கே.ஆர்.விஜயா நடிப்பில் நல்லநேரம் என்ற பெயரில் ரீ-மேக்காகி ஹிட்டானது. இந்நிலையில், இந்தப்படம் இப்போது மீண்டும் மூன்று மொழிகளில் ரீ-மேக்காக உள்ளது.
எம்.ஜி.ஆர், ராஜேஷ் கண்ணா நடித்த கேரக்டரில் "பாகுபலி" புகழ் ராணா நடிக்கிறார். காலத்துக்கு ஏற்ற மாதிரி சில மாறுதல்களுடன் படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா, தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் யானையுடன் அவர் இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. அத்துடன், புத்தாண்டு, புதிய கதை, ஹாத்தி மேரா சாத்தி மூலம் பன்தேவ் அறிமுகம் என கூறியுள்ளார்.
ஹாத்தி மேரா சாத்தி ரீ-மேக்கை, மூன்று மொழிகளில் பிரபுசாலமன் இயக்குவார் என தெரிகிறது.