இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரது மனதிலும் இடம் பிடித்த ஒரு நடிகையாக தனி இமேஜைப் பெற்றார் ஓவியா. பாதியிலிருந்து நிகழ்ச்சியில் வெளியேறினாலும், அந்த நிகழ்ச்சி முடியும் வரை ஓவியாவைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அவருடைய வெளிப்படையான குணமே அவருக்கு அப்படி ஒரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால், புது வருடத்தை முன்னிட்டு சிம்பு இசையமைத்து உருவாக்கிய 'மரண மட்டை' என்று தலைப்பிட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள ஒரு பாடலைப் பாடி ஓவியா அவருக்கென இருந்த இமேஜைக் கொஞ்சம் கெடுத்துக் கொண்டுள்ளார்.
பாடலின் ஆரம்பத்திலேயே ஓவியா குடித்து விட்டு பேசுவது போல ஆரம்பமாகும் அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகள்... “நியூ இயர் நைட்டு ஆவலமா டைட்டு, போன காதலை மனசு இன்னும் மறக்கவில்லை, பாட்டிலைத்தான் தொறக்குறோம், பழசெல்லாம் மறக்கறோம்,' குடிக்கத் தூண்டும் வரிகளை சேர்த்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, பாடலின் வீடியோவில் கூட ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அஜித், கமல்ஹாசன், பவன் கல்யாண், விஜய் , சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் 'சரக்கு' அடிக்கும், அடித்துவிட்டு ஆடும் காட்சிகளையும் இணைத்துள்ளனர்.
புத்தாண்டை பலரும் சிறப்பாக நல்லெண்ணங்களுடன் கொண்டாடி மகிழுங்கள் என மக்களை வாழ்த்தி செய்திகளையும், பாடல்களையும் வெளியிடும் போது சிம்பு சரக்கடித்து மட்டை ஆகிவிடுங்கள் என்று எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார். அதற்கு ஓவியாவும் உதவியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்தப் பாடலை குடிப்போர்கள் சீக்கிரமே அவர்களது பிரச்சாரப் பாடலாக மாற்றிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாடல் லிங்க் : https://youtu.be/sF9Aeoo1PaE