ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை : நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக நேற்று ரஜினி பேசும் போது, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ரஜினி, புதிதாக இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் செய்தியில் கூறியிருப்பதாவது... எனது அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்றத்தின் விபரங்களுடனும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், இவை இரண்டையும் RAJINI MANDRAM என்ற பெயரில் உள்ள ஆண்ட்ராய்டு இணையதள செயலியிலோ அல்லது WWW.RAJINIMANDRAM.ORG என்ற வலைதள பக்கத்திலோ பதிவு செய்து மன்றத்தின் உறுப்பினர் ஆகலாம்.
நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோம்.
நன்றி
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
பாபா முத்திரை சின்னமா?
ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் பாபா முத்திரையுடன் கூடிய லோகோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உண்மை உழைப்பு உயர்வு என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அநேகமாக இது ரஜினியின் கட்சி சின்னமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.