இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்த ஆண்டு பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், கலகலப்பு-2, மதுரவீரன், நிமிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மன்னர் வகையறா என 9 படங்கள் ரிலீஸ் ஆகயிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரேநாளில் இத்தனை படங்கள் வெளியாவது சாத்தியமில்லை. தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்பதால், கடைசி நேரத்தில் சில படங்கள் பின்வாங்கி விடும் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது விக்ரமின் ஸ்கெட்ச் படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. அதனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் ஸ்கெட்ச் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி விடும் என்று தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
மேலும், ஸ்கெட்ச் படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 26-ந்தேதி வெளியாகிறது. அதனால் ஒருவேளை பொங்கலுக்கு ஸ்கெட்ச் திரைக்கு வராதபட்சத்தில், ஜனவரி 26-ல் தமிழிலும் அப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.