மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
அருள்நிதி தற்போது நடித்து வரும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இவர்களுடன் அஜ்மல், வித்யா, சாயாசிங், ஆனந்த ராஜ், சுஜா வாருணி, ஜான்விஜய், நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். படம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. "இது ஒரே இரவில் நடக்கும் கதை, ஒரு கால் டாக்சி டிரைவரின் இரவு நேர அனுபவங்கள்" என்கிறார் இயக்குனர் மு.மாறன். அவர் மேலும் கூறியதாவது:
இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான், சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை பார்ப்பீர்கள். அருள்நிதி மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். என்கிறார் இயக்குனர் மாறன்.