பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழில் ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம் படங்களின் இணை தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே என்ற படத்தையும் தயாரித்தவர். இண்டியன் சம்மர், பிளட் ஸ்டோன், இன்பர்னோ, ஜங்கிள் பாய், புரவோக்டு போன்ற பிரமாண்ட ஹாலிவுட் படங்களையும் தயாரித்தவர்.
60 வயதான சுனந்தா மும்பையில் நேற்று காலமானார். கடந்த சில வாரங்களாகவே உடல்நலம் குன்றி மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். சிகிச்சை பலனிற்றி இறந்தார். இன்று அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. சுனந்தா முரளி பிரபல கன்னட தயாரிப்பாளர் ஆர்.என்மந்த்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.