'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வரும் மார்ச் மாதம், நடிகர் சல்மான் கான் தபாங் 3 படத்தின் வேலைகளை துவக்குவார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால், தற்போது பாரத் என்ற மற்றொரு படத்தின் வேலைகளுக்காக தபாங் 3 பட வேலைகளை கிடப்பில் போட சல்மான் கான் முடிவு செய்துள்ளாராம்.
சல்மான் கான் தற்போது ரேஸ் 3 படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்த உடன் பாரத் படத்தின் வேலைகளை துவக்க உள்ளாராம். இது தவிர தபாங் படத்திற்காக ஐரோப்பா மற்றும் சில இந்திய நகரங்களிலும் லோகேஷன் பார்க்கம் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறாராம் சல்மான். இருப்பினும் தபாங் 3 படத்தின் வேலைகளை சிறிது காலம் கிடப்பில் போடவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.