ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்றைய முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். மீடியம் பட்ஜெட் படங்களின் மோஸ்ட் வாண்டட் இசை அமைப்பாளர். "எனக்கு நேரம் இல்லை" என்று படங்களை தவிர்க்கிற அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். தற்போது அவர் இசை அமைத்து வரும் டிக் டிக் டிக் படம் அவருக்கு 100வது படம்.
பள்ளியில் படிக்கும்போதே இசை மீது ஆர்வம் கொண்ட இமான். முறைப்படி இசை கற்று 15 வயதில் கீ போர்ட் பியேளர் ஆனார். நடிகை குட்டிபத்மினி கிருஷ்ணதாஸி என்ற சின்னத்திரை தொடருக்கு இமானை இசை அமைப்பாளர் ஆக்கினார். அதன்பிறகு சிங்காரம், கோலங்கள், முகங்கள், அகல்யாக, கல்கி, அல்லி ராஜ்யம், திருமதி செல்வம், ருத்தா, வசந்தம், உறவுகள், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களுக்கு இசை அமைத்தார்.
அதன்பிறகு காதலே சுவாசம் என்ற படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளர் ஆனார். தமிழன், சேனா, விசில் கிரி, ஆணை, ஏபிசிடி, அன்பே வா, தகதிமிதா, தலைநகரம், குஸ்தி, என மீடியம் பட்ஜெட் படங்களின் இசை அமைப்பாளர் ஆனார். பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் இமானை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்தப் படத்தின் வெற்றியும் பாடல்களின் வெற்றியும் அவரை பெரிய பட்ஜெட் படங்களின் இசை அமைப்பாளராக்கியது. கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, சிகரம் தொடு, ஜீவா, ரோமியோ ஜூலியட், மிருதன் என தொடர் ஹிட்டுகளை கொடுத்தார்.
தற்போது வணங்காமுடி, போகி, நான் தான் சிவா, டிக் டிக் டிக் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். பட்டியல்படி டிக் டிக் டிக் 100வது படம். ஹாலிவுட் பாணியில் தயாராகிற வரும் வின்வெளி பயணக்கதையான இதில் இமான் தனது இசையின் அடுத்த பரிமாணத்தை தர இருக்கிறார்.