வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அஜீத் நடித்த பில்லா, ஆரம்பம் உள்பட பல படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். ஆர்யா நடித்த யட்சன் படத்திற்கு பிறகு அவர் மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் விவேகத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சிவா இயக்கத்திலேயே அஜீத் நடிக்கயிருக்கும் செய்திதான் வெளியானது.
அதனால் விக்ரமிற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளார் விஷ்ணு வர்தன். அவரை வைத்து தனது புதிய படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது சாமி-2, துருவநட்சத்திரம் படங்களில் நடித்தபடி தனது மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்திலும் கவனம் செலுத்தி வரும் விக்ரம், அந்த படங்களை முடித்ததும் 2018 மே மாதத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிக்கிறாராம்.
மேலும், விக்ரம் என்றாலே வித்தியாசம் என்றாகி விட்டதால், அவரை வைத்து தான் இயக்கும் படத்தில் விக்ரமை இதுவரையில்லாத இன்னொரு வித்தியாசமான தோற்றத்துக்கு மாற்றப்போகும் விஷ்ணுவர்தன், அந்த படம் திரில்லர் கதையில் இயக்குகிறார்.