வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது.
இப்படம் கேங் என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. கேங்கிற்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருந்தார் சூர்யா. வரும் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10-ந்தேதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் வெளியாகிறது. தவிர வேறு சில தெலுங்கு படங்களும் அன்றைய தினம் திரைக்கு வருகிறது.
இதனால் டப்பிங் படமான சூர்யாவின் கேங் பின்வாங்கி விடும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ஜனவரி 12-ந்தேதி கேங் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.