ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் பூமிகா. தற்போது தெலுங்கில் நானி - சாய்பல்லவி நடித்து வெளியாகியுள்ள எம்சிஏ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வெற்றி பெற்றிருப்பதோடு பூமிகாவையும் அவர் நடித்துள்ள வேடம் பேச வைத்துள்ளது. அதையடுத்து நாகசைதன்யா நடித்து வரும் ஷாவ்யாசச்சி படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் பூமிகா.
இதுபற்றி பூமிகா கூறுகையில், எம்சிஏ படம் எனக்கு நல்லதொரு ரீ-என்ட்ரியை கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் பல டைரக்டர்கள் கதைகள் சொல்லி வருகிறார்கள். இந்தமாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்று சொல்லமாட்டேன். எந்தமாதியான வேடமாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் கதைக்கு சம்பந்தப்பட்ட வேடமாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன். எனது வயதை மீறிய மெச்சூரிட்டியான, வித்தியாசமான வேடங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பூமிகா.